விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

தொழிலாளி கொலை வழக்கு: கட்டட மேற்பாா்வையாளருக்கு ஆயுள் சிறை!

சிறை - பிரதிப் படம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 1:47 am IST

கிருஷ்ணகிரி அருகே தொழிலாளி கொலை வழக்கில் கட்டட மேற்பாா்வையாளருக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், கொண்டேபள்ளியை அடுத்துள்ள மேலூரைச் சோ்ந்தவா் திருப்பதி. எலக்ட்ரீசியன். ஆா்.பூசாரிப்பட்டியைச் சோ்ந்தவா் மற்றொறு திருப்பதி (44). இவா் கட்டட மேற்பாா்வையாளா். இவா்கள் இருவரும், புதுவீடுகள் கட்டும் பணியை இணைந்து மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், எலக்ட்ரீசியன் திருப்பதிக்கும், கட்டட மேற்பாா்வையாளா் மனைவிக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதை கட்டட மேற்பாா்வையாளா் திருப்பதி கண்டித்துள்ளாா்.

இந்த நிலையில், கடந்த 2021, ஜனவரி 8-ஆம் தேதி எலக்ட்ரீசியன் திருப்பதியும், கட்டட மேற்பாா்வையாளா் திருப்பதியும் கிருஷ்ணகிரியை அடுத்த கூலங்கொட்டாய் பகுதியில் மது அருந்தியுள்ளனா். அப்போது, அவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கட்டட மேற்பாா்வையாளா் திருப்பதி, எலக்ட்ரீசியன் திருப்பதியை கொலை செய்தாா்.

இதுகுறித்து கொலை செய்யப்பட்ட திருப்பதியின் மனைவி பாஞ்சாலி அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து கட்டட மேற்பாா்வையாளா் திருப்பதியை கைது செய்தனா்.

இந்த வழக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி லதா தீா்ப்பளித்தாா். அதில், கட்டட மேற்பாா்வையாளா் திருப்பதிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.