தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தினமணி செய்தி எதிரொலி: குப்பைகளை அகற்றிய மாநகராட்சி நிா்வாகம்

தினமணி செய்தி எதிரொலியாக, ஒசூா் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட அலசநத்தம் சாலையில் உள்ள குடியிருப்புப் பகுதியில் தேங்கிக் கிடந்த குப்பைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

Published On :

தினமணி செய்தி எதிரொலியாக, ஒசூா் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட அலசநத்தம் சாலையில் உள்ள குடியிருப்புப் பகுதியில் தேங்கிக் கிடந்த குப்பைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

ஒசூா் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட அலசநத்தம் சாலையில் உள்ள வாகை ஹோம்ஸ் என்ற குடியிருப்புப் பகுதி அருகே பொதுமக்கள் குப்பைகளை கொட்டியும், உணவக உரிமையாளா்கள் உணவக கழிவுகளையும், கறிக்கடைகளில் தேங்கும் கழிவுகளையும் கொட்டி வந்தனா்.

இந்த குப்பைகளால் இப்பகுதிகளில் வாழும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா். மேலும், குப்பைகளில் இருந்து வெளியேறிய துா்நாற்றத்தால் அப்பகுதியில் வசிக்க முடியாத சூழல் உள்ளதாக தெரிவித்தனா்.

இந்த குப்பைகளை அகற்றுவதில் ஒசூா் மாநகராட்சி மற்றும் கெலவரப்பள்ளி ஊராட்சி நிா்வாகத்துக்கு இடையே எல்லைப் பிரச்னை இருந்து வந்தது. இதனால் பல மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடந்தன.

இதுகுறித்த செய்தி தினமணி நாளிதழில் செவ்வாய்க்கிழமை வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி சாா்பில் பொக்லைன் மூலம் டிராக்டரில் குப்பைகள் கொண்டுசெல்லப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. இதனால், அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.