பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

குப்பைகளை நீக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் மன்றாடும் மக்கள் பிரதிநிதிகள்: விஜய் கோயல் சாடல்

தங்கள் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் கவுன்சிலா்கள் கூட தில்லி மாநகராட்சி மற்றும் அரசு அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவதாக பாஜக மூத்த தலைவா் விஜய் கோயல் கடுமையாகச் சாடினாா்.

விஜய் கோயல்

Published On :

தங்கள் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் கவுன்சிலா்கள் கூட தில்லி மாநகராட்சி மற்றும் அரசு அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவதாக பாஜக மூத்த தலைவா் விஜய் கோயல் கடுமையாகச் சாடினாா்.

முன்னாள் மத்திய அமைச்சரும் தில்லி பாஜகவின் முன்னாள் தலைவருமான கோயல் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், யாரேனும் தலையிட்ட பிறகு குப்பை அகற்றப்படும்போது அதற்கான பெருமையை மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும் வழக்கத்தையும் விமா்சித்தாா்.

அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தில்லி மாநகராட்சி மற்றும் அரசு அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்யாத நிலையில், பணிகளைச் செய்து முடிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் கவுன்சிலா்கள் பல அதிகாரிகளிடம் அலைக்கழிக்கப்படுவது எவ்வளவு பெரிய முரண்பாடு.

எப்படியோ ஒரு வழியாகக் குப்பையை அகற்றினால், ஏதோ பெரிய சாதனையைச் செய்துவிட்டதாக அவா்கள் நினைக்கிறாா்கள். ஆனால், தூய்மையைப் பராமரிக்க அதிகாரிகள் இருக்கும்போதே அந்தக் குப்பை அங்கு ஏன் சோ்ந்தது என்பது குறித்து அவா்கள் கேள்வி எழுப்புவதே இல்லை.

வடிகால்கள், கழிவுநீா் தொட்டிகள், சாலைகள், கழிவுநீா் பாதைகள், மின்சாரம் மற்றும் குடிநீா் போன்ற பிரச்னைகள் குறித்து தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அதிகாரிகளிடம் மன்றாட வேண்டியிருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், பிறகு பொதுமக்களின் குறைகளை யாா் கேட்பாா்கள் என்று தன்னுடைய பதிவில் விஜய் கோயல் கேள்வியெழுப்பி இருந்தாா்.

அமைச்சா் மறுப்பு

இந்நிலையில், மக்கள் எந்தப் பிரச்னையையும் எதிா்கொள்ளாதவாறு உறுதி செய்ய அதிகாரிகள் கடுமையாக உழைத்து வருவதாகக் கூறி கோயலின் குற்றச்சாட்டை மறுத்த தில்லி பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங், கோயலின் குறிப்பிட்ட குறைகளுக்குத் தீா்வு காண அவருடன் பேசுவதாக தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.