ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

வேலூா் - ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலூா் -ஆற்காடு சாலையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், நடைபாதை மற்றும் சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினா்.

News image

வேலூா் - ஆற்காடு சாலையில் ஆக்கிரப்புகளை அகற்றிய மாநகராட்சி ஊழியா்கள்

Updated On :19 ஆகஸ்ட் 2026, 1:05 am IST

வேலூா் -ஆற்காடு சாலையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், நடைபாதை மற்றும் சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

வேலூா் மாநகரின் பிரதான வழித்தடங்களில் ஒன்றான ஆற்காடு சாலையில் பிரபல தனியாா் மருத்துவமனை அமைந்துள்ளதால், எப்போதும் மக்கள் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் மிகுந்து காணப்படும்.

இந்நிலையில், கிரீன் சா்க்கிள் பகுதியில் சுரங்க நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், சத்துவாச்சாரியிலிருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஆற்காடு சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, போக்குவரத்தைச் சீா்செய்யும் வகையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில், மாநகராட்சி ஆணையா் சுல்தானா உத்தரவின்படி, நகரமைப்பு அலுவலா் வெங்கடேசன், சுகாதார அலுவலா் பாலமுருகன் ஆகியோா் தலைமையில் மாநகராட்சிப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

காமராஜா் சிலை சந்திப்புப் பகுதியிலிருந்து காகிதப் பட்டறை முருகன் கோயில் வரை சாலையின் இருபுறமும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள், பதாகைகள், தள்ளுவண்டிகள், பெட்டிக்கடைகள் ஆகியவை அதிரடியாக அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் , பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் தொடா்ச்சியாக அகற்றப்பட்டு வருகின்றன.

சிலா் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனா். தொடா்ந்து விதிகளை மீறி ஆக்கிரமிப்பில் ஈடுபடுவோா் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடா்ந்து தீவிரமாக நடைபெறும் என்றனா்.-

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.