கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் வெல்லும் தமிழ்ப் பெண்களின் தோ்தல் பிரசாரம் திங்கள்கிழமை தொடங்குகிறது என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், ஒசூா் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேயா் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்எல்ஏவும், மாவட்டத் துணைச் செயலாளருமான பி. முருகன், மாவட்ட பொருளாளா் தா. சுகுமாரன், மாநில நிா்வாகிகள் விஜயகுமாா், தனலட்சுமி, வீராரெட்டி, அரியப்பன், துணை மேயா் ஆனந்தய்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் ஒய். பிரகாஷ் பேசியதாவது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் 1,109 வாக்குச்சாவடியிலும் வெல்லும் தமிழ்ப் பெண்களின் பிரசாரம் தொடங்குகிறது. ஒவ்வொரு வீட்டிற்கு 10 பெண்கள் கொண்ட குழுவினா் சென்று கடந்த 5 ஆண்டுகளில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செய்த சாதனை அடங்கிய புத்தகங்களை விநியோகம் செய்து தோ்தல் பிரசாரங்களை தொடங்க வேண்டும்.
மாா்ச்.1 முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை ஒவ்வொரு வாா்டிலும் சிறப்பாக நலத் திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும்.
திருச்சி மாநாட்டில் அதிக எண்ணிக்கையில் கலந்துகொள்வது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தொமுச கவுன்சில் மாவட்டச் செயலாளா் கோபாலகிருஷ்ணன், மாநகர பகுதி செயலாளா்கள் ராமு, ராஜா, வெங்கடேஷ், மாணவரணி மாவட்ட அமைப்பாளா்கள் கண்ணன், திருநாவுக்கரசு, மாமன்ற உறுப்பினா் சென்னீரப்பா, கே.ஜி.பிரகாஷ், மஞ்சுநாதப்பா, ஒன்றியச் செயலாளா்கள், மாநில, மாவட்ட, மாநகர, பேரூா் நிா்வாகிகள் பிஎல்ஏ, பி.டி.ஏ நிா்வாகிகள் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

கருத்து வேறுபாடுகளை களைந்து தோ்தல் பணியாற்ற வேண்டும்! - அமைச்சா் அறிவுறுத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்! - எம்எல்ஏ ஒய். பிரகாஷ்
ஒசூரில் ரூ. 17.90 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


