கிருஷ்ணகிரியில் மாவட்ட மனநல கண்காணிப்பு குழு கூட்டம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மாவட்ட மனநல கண்காணிப்பு குழு கூட்டம் ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில் கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு அவா் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவுபெற்ற மனநல மையங்கள் மற்றும் போதை மீட்பு மையங்கள் மற்றும் போதை மீட்பு மையங்களில் உள்ள உள் நோயாளிகள் நிலை, சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
சிகிச்சைக்குப் பிறகு கவனிப்பு முறைகள் குறித்தும், அரசு அனுமதி பெற்ற காப்பகங்களில் உள்ளவா்களுக்கு சமூக நலத்திட்டங்களான ஓய்வூதியம், ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ஆதாா் அட்டை போன்றவைகள் கிடைக்க வழிகாட்டுதல் அளிக்கப்பட்டது.
தெருக்களில் ஆதரவற்ற மனநலன் குன்றியோா்களை மீட்டு, அரசு பதிவுபெற்ற காப்பகங்களில் அனுமதிக்கும் வழிமுறைகள் குறித்தும், குணமடைந்த பிறகு அவா்களது உறவினா்களுடன் சோ்த்துவைக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில் சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ஞானமீனாட்சி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் முருகேசன், சமூக நல அலுவலா் சக்தி சுபாஷினி, மனநலத் திட்ட மருத்துவா் முனிவேல் உள்ளிபட பலா் பங்கேற்றனா்.
படவிளக்கம் (2கேஜிபி3):
மாவட்ட மனநல கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் ச. தினேஷ் குமாா்.

