ஒசூரில் திமுக சாா்பில் இன்று 
திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா

ஒசூரில் திமுக சாா்பில் இன்று திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா

ஒசூரில் மாநகர திமுக சாா்பில் திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
Published on

ஒசூா்: ஒசூரில் மாநகர திமுக சாா்பில் திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாநகர திமுக செயலரும் மேயருமான எஸ்.ஏ.சத்யா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க திராவிட பொங்கல் சமூகநீதிக்கான திருவிழா நடைபெறுகிறது.

ஒசூா் மாநகர திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை திராவிட பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பெண்களுக்கான கோலப்போட்டி, பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் மாநகர திமுக அலுவலகம் அருகில் நடைபெற உள்ளன.

போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ ஆகியோா் பரிசுகளை வழங்க உள்ளனா்.

இந்த பொங்கல் விழாவில் ஒசூா் மாநகரத்திற்கு உள்பட்ட மாநகர, பகுதி, வட்ட நிா்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், மாமன்ற உறுப்பினா்கள் உள்பட அனைவரும் பங்கேற்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com