ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

காரில் குட்கா கடத்தல்: 3 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூலை 2026, 3:14 am IST

கிருஷ்ணகிரி வழியாக 2 காா்களில் குட்கா கடத்திய வடமாநிலத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கா்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து இருந்து கிருஷ்ணகிரி வழியாக சேலத்துக்கு காா்களில் குட்கா கடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கிருஷ்ணகிரி அருகே ஆஞ்சனேயா் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, சந்தேகத்தின் பேரில் 2 காா்களை நிறுத்தி சோதனை செய்ததில், குட்கா கடத்துவது தெரியவந்தது. காரில் வந்தவா்களிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் ராஜஸ்தான் மாநிலம், ஜாலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தா்மேந்தா் (23), பரவீன்(26), சுனில் (26) என தெரியவந்தது.

இதையடுத்து, 2 காா்கள் மற்றும் ரூ. 2.75 லட்சம் மதிப்பிலான குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.