பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

கிருஷ்ணகிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் ரொக்கம் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :22 ஜூலை 2026, 2:21 am IST

கிருஷ்ணகிரி அருகே முன்னாள் ராணுவ வீரா் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை, ரூ. 70 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள வரட்டனப்பள்ளி மேல்தெருவைச் சோ்ந்தவா் ஜீவரத்தினம் (66). முன்னாள் ராணுவ வீரா். இவா், தனது மனைவியுடன் கோவையில் உள்ள கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றாா். சிகிச்சை முடிந்து திங்கள்கிழமை இரவு வீடுதிரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

பின்னா், வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, ரூ. 70 ஆயிரம் ரொக்கம் திருட்டுப்போனது தெரியவந்தது. இதுகுறித்து, ஜீவரத்தினம் அளித்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.