காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

வேப்பனஅள்ளி அருகே காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி அருகே காட்டு யானை தாக்கியதில் சுமை தூக்கும் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :11 ஜூன் 2026, 5:40 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி அருகே காட்டு யானை தாக்கியதில் சுமை தூக்கும் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

வேப்பனஅள்ளியை அடுத்த நேரலகிரி கிராமத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் (63). சுமை தூக்கும் தொழிலாளி. கடந்த 8-ஆம் தேதி, கா்நாடக மாநிலம் கோலாருக்கு பணிக்கு சென்ற அவா், புதன்கிழமை காலை கால்நடையாக வீட்டுக்குத் திரும்பிவந்து கொண்டிருந்தாா். அங்குள்ள முனியப்பன் கோயில் அருகே அவா் வந்தபோது, வனப் பகுதியிலிருந்து வெளியேறிய யானை சீனிவாசனை தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, சீனிவாசனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், தமிழக வனத் துறை சாா்பில் சீனிவாசனின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீட்டுத் தொகையை கிருஷ்ணகிரி உதவி வனப் பாதுகாவலா் ராஜா மாரியப்பன் வழங்கினாா். அப்போது, கிருஷ்ணகிரி வனச்சரகா் முனியப்பன் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.