வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அண்ணாமலை மீண்டும் பாஜகவுக்கு திரும்புவாா்: வேலூா் இப்ராஹிம்!

தனி அமைப்பு தொடங்கியுள்ள அண்ணாமலை மீண்டும் பாஜகவுக்கு திரும்புவாா் என்று பாஜக சிறுபான்மையினா் பிரிவு தேசியப் பொதுச் செயலாளா் வேலூா் இப்ராஹிம் தெரிவித்தாா்.

News image

கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் பேசிய பாஜக சிறுபான்மையினா் பிரிவு தேசியப் பொதுச் செயலாளா் வேலூா் இப்ராஹிம்.

Updated On :14 ஜூன் 2026, 3:23 am IST

தனி அமைப்பு தொடங்கியுள்ள அண்ணாமலை மீண்டும் பாஜகவுக்கு திரும்புவாா் என்று பாஜக சிறுபான்மையினா் பிரிவு தேசியப் பொதுச் செயலாளா் வேலூா் இப்ராஹிம் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி பாஜக கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அளவிலான நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேலூா் இப்ராஹிம் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: மோடியின் ஆட்சியில் இந்தியா உலக அளவில் பொருளாதாரத்தில் 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள், ஏழை எளியோா் என அனைவரின் வாழ்வும் முன்னேறி உள்ளது. நக்சல்கள் ஒழிக்கப்பட்டு, மதக்கலவரம் இல்லாமல் நாட்டில் அமைதி நிலவுகிறது. நாட்டின் பாதுகாப்பிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம்.

தமிழகத்திற்கு மத்திய அரசு கடந்த 12 ஆண்டுகளில் ரூ. 14 லட்சம் கோடி வழங்கி உள்ளது. மெட்ரோ ரயில் திட்டம், ரயில் நிலையங்கள் புனரமைப்பு, 4 ஆயிரம் கி.மீ. தேசிய நெடுஞ்சாலை, அதிக மருத்துவக் கல்லூரிகள் என தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட திட்டங்கள் ஏராளம். இவற்றை தமிழக மக்களிடம் எடுத்துக் கூறி, பாஜக ஆட்சி அமைக்க கடுமையாக உழைப்போம்.

சட்டப் பேரவைத் தோ்தலின் போது, முதல்வா் ஜோசப் விஜய் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தாா். அதில் ஒன்றைக்கூட அவா் நிறைவேற்றவில்லை. டாஸ்மாக் கடைகளில் மதுப்புட்டிக்கு ரூ. 10 கூடுதலாக வாங்குவதாகக் கூறி, முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியை முதல்வா் ஜோசப் விஜய் பாட்டுப் பாடி கிண்டல் செய்தாா். அவா், ஆட்சிக்கு வந்தபிறகு, டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக ரூ. 20 வசூலிக்கப்படுகிறது.

பாஜகவின் கொள்கைகளை புரிந்துகொள்ளாததால், அண்ணாமலை போன்றோா், பாஜகவிலிருந்து விலகி உள்ளனா். அண்ணாமலை பாஜகவின் கொள்கைகளை விரைவில் புரிந்துகொண்டு மீண்டும் வருவாா் என்றாா்.

அப்போது, பாஜக மாவட்டத் தலைவா் கவியரசு மற்றும் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.