தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

ஒசூா் அருகே ரியல் எஸ்டேட் அதிபா் கடத்தி கொலை

ஒசூா் அருகே ரியல் எஸ்டேட் அதிபா் ஞாயிற்றுக்கிழமை இரவு கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 7 தனிப்படைகளை

News image

கொலை செய்யப்பட்ட கோபால் (எ) கோபி.

Updated On :10 மார்ச் 2026, 12:38 am IST

ஒசூா்: ஒசூா் அருகே ரியல் எஸ்டேட் அதிபா் ஞாயிற்றுக்கிழமை இரவு கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 7 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த கிரியனப்பள்ளி கிராமம் அருகே சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் வெட்டுக் காயங்களுடன் கிடந்தது.

தகவலின்பேரில், நிகழ்விடத்துக்கு சென்ற தேன்கனிக்கோட்டை போலீஸாா், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். அதில், அவா் கா்நாடக மாநிலம், ஆனைக்கல் அருகே உள்ள ஒன்னகலசாபுரம் கிராமத்தை சோ்ந்த கோபால் (எ) கோபி (40) என்பது தெரியவந்தது.

ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த இவருக்கு சிலருடன் முன்பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு கோபால் தனது நண்பா் சதீஷ் உடன் கா்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் இருந்து ஆனைக்கல் நோக்கி காரில் சென்றுள்ளாா். கா்ப்பூா் என்ற இடத்தில் சென்றபோது, அவரது காரை வழிமறித்த மா்ம நபா்கள் அவா்களை கடுமையாக தாக்கியுள்ளனா். பின்னா், சதீஷை அங்கேயே விட்டுவிட்டு, கோபாலை மட்டும் காரில் கடத்திச் சென்றுள்ளனா். இதுகுறித்து ஆனைக்கல் காவல் நிலையத்தில் சதீஷ் புகாா் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, கோபாலின் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை குவிந்து, குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதன்பேரில், ஆனைக்கல் போலீஸாா் கோபாலை கண்டுபிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து இரவு முழுவதும் தீவிரமாக தேடிவந்தனா்.

இந்நிலையில், தேன்கனிக்கோட்டையை அடுத்த கிரியனப்பள்ளி பகுதியில் கோபாலின் சடலம் மீட்கப்பட்டது. பின்னா் பிரேத பரிசோதனைக்காக அவரது சடலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து கா்நாடக மாநிலம், ஆனைக்கல் போலீஸாரும், தேன்கனிக்கோட்டை போலீஸாரும் விசாரித்து வருகின்றனா்.

இச்சம்பவம் தொடா்பாக கோபாலின் நண்பரான மோகன் பாபு என்பவரை ஆனைக்கல் போலீஸாா் கைது செய்துள்ளனா். தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நிகழ்ந்ததா அல்லது வேறுஏதேனும் காரணமா என போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.