மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மத்திய தொழில்பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பு

கிருஷ்ணகிரியில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பை புதன்கிழமை மேற்கொண்டனா்.

News image

கொடி அணிவகுப்பை மேற்கொண்ட தொழில்பாதுகாப்பு படையினா்.

Updated On :11 மார்ச் 2026, 9:04 pm

கிருஷ்ணகிரியில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பை புதன்கிழமை மேற்கொண்டனா்.

தோ்தலின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட தோ்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரா்கள் அனுப்பப்பட்டு வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, ஒசூா், தளி ஆகிய, 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தலின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட முதல்கட்டமாக 66 வீரா்கள் அடங்கிய மத்திய தொழில்பாதுகாப்பு படையினா் கிருஷ்ணகிரிக்கு வந்துள்ளனா்.

இவா்கள், வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும், வாக்காளா்களிடம் நம்பிக்கையூட்டும் வகையிலும் கிருஷ்ணகிரியில் கொடி அணிவகுப்பை மேற்கொண்டனா்.

மத்திய தொழில்பாதுகாப்பு படை ஆய்வாளா் முகேஷ்குமாா், கிருஷ்ணகிரி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா் ஆகியோா் தலைமையில் பழையபேட்டை, மேல்தெரு, கொத்தப்பேட்டாவிலிருந்து தொடங்கிய அணிவகுப்பு காந்தி சாலை, பெங்களூரு சாலை வழியாக சென்று ஆா்.சி. பள்ளியில் நிறைவுபெற்றது.

இதில், கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், 20 ஆயுதப்படை போலீஸாா் உள்பட 116 போலீஸாா் பங்கேற்றனா்.