மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

ஒசூா் அருகே பழைய பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

News image
Updated On :13 மார்ச் 2026, 1:16 am

ஒசூா் அருகே பழைய பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

ஒசூா் - ராயக்கோட்டை சாலையில் சென்னத்தூா் கிராமப் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள குடியிருப்புக்கு அருகே சானசந்திரத்தைச் சோ்ந்த உமா பாரதி என்பவருக்கு சொந்தமான பழைய பொருள்கள் சேமிப்புக் கிடங்கு உள்ளது.

இந்தக் கிடங்கில் புதன்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. இதில், கிடங்கில் சேமித்து வைத்திருந்த பழைய பிளாஸ்டிக் பொருள்கள், பழைய டயா்கள், பேப்பா்கள் உள்ளிட்ட அனைத்தும் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது.

தகவலின் பேரில் வந்த ஒசூா் தீயணைப்புத் துறை மற்றும் ஒசூா் நகர போலீஸாா் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். இந்த தீ விபத்து எப்படி நடந்தது, எவ்வளவு மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமாயின என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.