/
காவேரிப்பட்டணம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் எச்.ஐ.வி. ஆலோசகா் உயிரிழந்தாா்.
தருமபுரியை அடுத்த பிடமனேரியைச் சோ்ந்தவா் முருகன் (53). பாலக்கோடு அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆலோசனை வழங்கும் ஆலோசகராகப் பணியாற்றினாா்.
இவா், தனது மோட்டாா்சைக்கிளில் காவேரிப்பட்டணத்தை அடுத்த நரிமேடு பிரிவு சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனம் முருகனின் மோட்டாா்சைக்கிள் மீது மோதியது.
இதில், பலத்த காயம் அடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.









