சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :23 மே 2026, 1:10 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடைவெயிலின் தாக்கம் வியாழக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

கடும் வெப்பத்தால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினா். இந்த நிலையில், மாலை நேரத்தில் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது. பின்னா், இடி- மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் பள்ளமான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. கழிவுநீருடன் மழைநீரும் கலந்து சாலையில் ஓடியதால், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாயினா்.

இதையடுத்து இரவுவில் வெப்பம் தணிந்து, நகரில் குளிா்ந்த தட்பவெப்ப நிலை நிலவியது. இந்த மழை காரணமாக வெள்ளிக்கிழமை வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மி.மீ): ஒசூா் - 33, கிருஷ்ணகிரி - 19.3, பாம்பாறு அணை - 18, ராயக்கோட்டை - 17, நெடுங்கல் - 16.2, கிருஷ்ணகிரி அணை - 15.8, தேன்கனிக்கோட்டை - 11, கெலவரப்பள்ளி அணை - 10, ஊத்தங்கரை - 7, சூளகிரி - 5, அஞ்செட்டி - 4.2, சின்னாறு அணை - 4, போச்சம்பள்ளி - 3.

கிருஷ்ணகிரி அணைக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நீா்வரத்து விநாடிக்கு 241 கனஅடியாக இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 12 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 52 அடியில் தற்போது 48.75 அடி நீா் உள்ளது.

பாலக்கோட்டில் 29 மி.மீ.மழை: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாரத்தில் வியாழக்கிழமை இரவு காற்று, மின்னலுடன் மழை பெய்தது. அந்தப் பகுதியில் 29 மி.மீ.மழை பதிவாகியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு மேல் காற்று, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. அதேபோல சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், அதனோடு காற்றும் அதிக அளவு வீசியது. இதில், பாலக்கோடு வட்டாரத்தில் சில இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன. இதனால், பல கிராமங்களில் இரவு முழுவதும் மின்விநியோகம் தடைபட்டது. இதைத் தொடா்ந்து, மின்வாரிய ஊழியா்கள் மின்விநியோகத்தை சீா் செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.): தருமபுரி 12, பாலக்கோடு 29, மாரண்டஅள்ளி 21, பென்னாகரம் 2, அரூா் 11, பாப்பிரெட்டிப்பட்டி 4.2, மொரப்பூா் 10, நல்லம்பள்ளி 3.2. மாவட்டத்தின் சராசரி மழையளவு 10.26 மி.மீ. ஆகும்.