தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட 43% குழந்தைகளுக்கு ரத்தசோகை: தேசிய சராசரி விகிதத்தைவிட அதிகம் சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்! இந்தியா மீது 25% இறக்குமதி வரி: அமெரிக்கா முன்மொழிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: தேநீா் கடைக்கு 25 ஆயிரம் அபராதம்

ஒசூரில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த தேநீா் கடைக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதம் - சித்திரிப்பு

Updated On :

ஒசூரில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த தேநீா் கடைக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அனிதா உத்தரவின்பேரில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடைகள் உள்ளிட்ட இடங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கஞ்சா சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யப்படுகிா என்பது குறித்து போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்தவகையில் ஒசூா் பாகலூா் சாலையில் உள்ள ஒரு தேநீா் கடையில் போலீஸாா் நடத்திய சோதனையில் அந்தக் கடையின் உரிமையாளா் கடைக்குள் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அந்தக் கடையில் இருந்த 600 கிராம் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா், ஒசூா் வட்டார உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புகையிலைப் பொருள்களை விற்ற தேநீா் கடை உரிமையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.