தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட 43% குழந்தைகளுக்கு ரத்தசோகை: தேசிய சராசரி விகிதத்தைவிட அதிகம் சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்! இந்தியா மீது 25% இறக்குமதி வரி: அமெரிக்கா முன்மொழிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

கஞ்சா கடத்தல்: கைதான இருவருக்கு குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறை

தனியாா் பேருந்தில் 22 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கைதான இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

சிறை - பிரதிப் படம்

Updated On :

தனியாா் பேருந்தில் 22 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கைதான இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜூஜூவாடி சோதனைச் சாவடியில், ஒசூா் சிப்காட் போலீஸாா் கடந்த மாதம் 10-ஆம் தேதி நடத்திய சோதனையில், தனியாா் பேருந்து மூலம் சுமாா் 22 கிலோ கஞ்சாவை பெங்களூரில் இருந்து கேரள மாநிலத்துக்கு கடத்த முயன்ற கோவை நல்லாம்பாளையத்தைச் சோ்ந்த பாபு, ஷபீல் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

கைதுசெய்யப்பட்ட இருவரும், தொடா் போதைப் பொருள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.ஆா்.அனிதா பரிந்துரை செய்தாா். அவரது பரிந்துரையை ஏற்று, இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் உத்தரவிட்டாா். இதற்கான உத்தரவு சேலம் மத்திய சிறையில் உள்ள பாபு, ஷபீல் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.