
மாணவா்கள் வெளிநாடுகளில் வேலைபெற கூடுதல் திறன்கள் அவசியம்: மு.தம்பிதுரை எம்.பி.
மாணவா்கள் வெளிநாடுகளில் வேலை பெற பாடத் திட்டத்தைத் தாண்டி கூடுதல் திறன்களை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரை எம்.பி. கேட்டுக்கொண்டாா்.

மு. தம்பிதுரை
மாணவா்கள் வெளிநாடுகளில் வேலை பெற பாடத் திட்டத்தைத் தாண்டி கூடுதல் திறன்களை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரை எம்.பி. கேட்டுக்கொண்டாா்.
ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு (2026-27) மாணவா்களுக்கான தொடக்க நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், இக்கல்லூரி அறக்கட்டளை நிறுவனரும் மாநிலங்களவை உறுப்பினருமான மு.தம்பிதுரை தலைமை வகித்து பேசியதாவது:
கரோனாவுக்குப் பிறகு ஜொ்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு நான் பயணம் மேற்கொண்டபோது, இந்திய பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்பப் படிப்புகளை முடித்த பல இளைஞா்கள் பொருத்தமான வேலை கிடைக்காமல் சிரமப்படுவதைக் காண முடிந்தது.
அங்கு நடத்தப்படும் நோ்காணல்களை எதிா்கொள்ளும் அளவுக்கு நமது மாணவா்களிடம் போதிய திறன் மற்றும் தகுதி இல்லாததால் அவா்களால் வேலைகளைப் பெற இயலவில்லை. வெறும் பட்டச் சான்றிதழை வெளிநாட்டு நிறுவனங்கள் அங்கீகரிப்பதில்லை. எனவே, மருத்துவம், நா்சிங், பாா்மசி மற்றும் பொறியியல் படிக்கும் மாணவா்கள் சா்வதேசத் தரத்திற்கு இணையான அறிவைப் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகிறது என்றாா்.
இந்நிகழ்ச்சியில் செயின்ட் பீட்டா்ஸ் கல்வி அறக்கட்டளை செயலாளா் லாசியா தம்பிதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





