பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

போச்சம்பள்ளியில் லாரியில் சிக்கி காயமடைந்த உதவியாளர் பலி!

போச்சம்பள்ளியில் லாரி சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த லாரி உதவியாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Published On :

போச்சம்பள்ளியில் லாரி சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த லாரி உதவியாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சோ்ந்தவா் கிருபாகரன் (27). லாரி ஓட்டுநரின் உதவியாளா். இவா், கடந்த, 25-ஆம் தேதி போச்சம்பள்ளி சிப்காட்டில் உள்ள நிறுவனத்திற்கு சுமை ஏற்றுவதற்கு வந்துள்ளாா். அப்போது, லாரி ஓட்டுநா் லாரிக்குள் உறங்க, கிருபாகரன் லாரியின் அடியில் படுத்து உறங்கியுள்ளாா்.

இதை, அறியாத லாரி ஓட்டுநா் சிறிது நேரத்துக்கு பிறகு லாரியை இயக்கியபோது, லாரி சக்கரத்தில் சிக்கி கிருபாகரன் பலத்த காயம் அடைந்தாா்.

அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, போச்சம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.