பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:03 am

DIN

நாமக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், பிற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப் பலன்களை உடனடியாக வழங்கவேண்டும். 13-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும். 2003-ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 
அரசு போக்குவரத்துக் கழக நாமக்கல் கிளை அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவர் சிங்காரம் தலைமை வகித்தார். எல்பிஎப் சங்கச் செயலர் முருகேசன், பிரகாசம், பணியாளர் சங்கச் செயலர் சேகர் முன்னிலை வகித்தனர். எல்பிஎப் மத்திய சங்க துணைச் செயலர் தனபால் நன்றி கூறினார்.
திருச்செங்கோட்டில்...
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நெய்க்காரப்பட்டி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.