வளாகத் தேர்வு: எக்ஸல் கல்லூரி மாணவர்கள் தேர்வு

வேலைவாய்ப்பு வளாகத் தேர்வில், குமாரபாளையம் எக்ஸல் கல்லூரி மாணவர்கள் 12 பேர் தேர்வு பெற்றனர்.
Updated on
1 min read

வேலைவாய்ப்பு வளாகத் தேர்வில், குமாரபாளையம் எக்ஸல் கல்லூரி மாணவர்கள் 12 பேர் தேர்வு பெற்றனர்.
 பெங்களுரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இநோவா ஐ சொல்யூசன்ஸ் நிறுவனம் சார்பில், வேலைவாய்ப்பு வளாகத் தேர்வு குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் மற்றும் தொழில்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
 இதில் எக்ஸல் பொறியியல் கல்லூரி, எக்ஸல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் எக்ஸல் பிசினஸ் கல்லூரிகளின் அனைத்து இளநிலை பொறியியல் பாடப் பிரிவுகள் மற்றும் எம்.சி.ஏ. பயிலும் இறுதியாண்டு மாணவ, மாணவியர் என 228 பேர் பங்கேற்றனர்.
 பயிற்சி பொறியாளர் பணியிடத்துக்கு நடைபெற்ற இத் தேர்வினை, இநோவா ஐ சொல்யூசன்ஸ் நிறுவன முதுநிலை மனிதவள அதிகாரிகள் நடத்தினர். இந்த தேர்வில் 12 பேர் தேர்வு பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
 வேலைவாய்ப்பு வளாகத் தேர்வில் தேர்வுபெற்ற மாணவ, மாணவியருக்கு எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.கே.நடேசன், துணைத் தலைவர் என்.மதன்கார்த்திக், வேலைவாய்ப்பு பயிற்சிப் பிரிவு இயக்குநர் ஜி.சம்பத், தொழிற்சாலை உறவுகள் மற்றும் ஆராய்ச்சித் திட்ட இயக்குநர் டி.தேவகுமார், கல்லூரி முதல்வர்கள் வி.கே.சண்முகநாதன், ஈ.பழனிச்சாமி, ஆர்.அமுதன், முதுநிலை வேலைவாய்ப்பு அலுவலர் இ.சுரேஷ், வேலைவாய்ப்பு அலுவலர்கள் எஸ்.விமலாதித்தன், வி.சக்கரவர்த்தி மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு துறை ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com