கபிலர்மலை அருகே பெரியமருதூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி, அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.குன்னத்தூர் ஊராட்சிக்குள்பட்ட பெரியமருதூரில், கடந்த இரு தினங்களுக்கு முன் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் அப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புதன்கிழமை திடீரென டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், தாற்காலிகமாக டாஸ்மாக் கடை மூடப்படும் எனவும், மாவட்ட நிர்வாகத்திடம் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என மனு அளிக்குமாறும் போலீஸார் தெரிவித்தனர். அதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகளிர் டி20 உலகக் கோப்பை: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!

இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் மீண்டும் தொடங்கும்: பாகிஸ்தான்
விடியோக்கள்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP


