காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, நாமக்கல் ரயில் நிலையத்தில் ரயிலை மறிக்க முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸார் அங்கிருந்து வெளியேற்றினர்.
நாமக்கல் ரயில் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு, நாமக்கல் மாவட்டச் செயலர் ஆர்.குழந்தான் தலைமை வகித்தார்.
நகரச் செயலர் ந.தம்பிராஜா, பொருளாளர் கே.ஜீவாதாசன், கிளை செயலர்கள் எம்.ஜீவானந்தம், அ.அருள்பிரசாத், கே.நடராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.வி.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர். மேலும், திருச்சி-சேலம் பயணிகள் ரயிலை மறிக்க முயன்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீஸார் அங்கிருந்து வெளியேற்றி, வாகனத்தில் ஏற்றி நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் இறக்கிவிட்டு சென்றனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
ராசிபுரத்தில்...
ராசிபுரம் ரயில் நிலையப் பகுதியில் கரூர்-சேலம் பயணிகள் ரயில் முன் மறியல் நடத்த முயன்றவர்களை ராசிபுரம் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து, ரயில் நிலையம் முன் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமெழுப்பினர். ராசிபுரம் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த மறியலில், எலச்சிப்பாளையம் ஒன்றிய செயலர் சி.ஜெயராமன், வெண்ணந்தூர் ஒன்றிய செயலர் ஆர்.முருகேசன், ஏ.குமார், நல்லமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் இவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
வழக்குரைஞர்கள்: இதே போல் ராசிபுரம் குற்றவியல் மற்றும் சிவில் நீதிமன்ற வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து நீதிமன்றம் முன் மறியல் நடத்தினர்.
இதில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் காமராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பாஸ்போர்ட் இந்திய குடியுரிமைக்கான ஆவணம் அல்ல! பயணத்துக்கு மட்டுமே!

த்ரிஷா கொடுத்த டிராமிசு கேக் ஹைதராபாத்-ல் மட்டும் கிடைக்குமா? என்ன ஸ்பெஷல்?

குரூப் பி பிரிவில் 3 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி..! எப்படி?
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


