திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சாலைப் பாதுகாப்பு  விழிப்புணர்வு ஊர்வலம்

குமாரபாளையத்தில் 29-ஆவது சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 2:51 am

DIN

குமாரபாளையத்தில் 29-ஆவது சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குமாரபாளையம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளர் வேலுத்தேவன் தலைமை வகித்தார். திருச்செங்கோடு காவல்துணைக் கண்காணிப்பாளர் எஸ். சண்முகம் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலத்தைக் கொடியைசைத்துத் தொடக்கி வைத்தார்.
இதில், பொதுமக்கள் மற்றும் போலீஸார் தலைக்கவசம் அணிந்தபடி நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்ற ஊர்வலம் புறப்பட்ட இடத்திலேயே மீண்டும் முடிவடைந்தது.
தொடர்ந்து நடைபெற்ற கண்காட்சியில், பாதுகாப்பான சாலைப் பயணம், போக்குவரத்து விதிகள், விபத்து பாதுகாப்பு உபகரணங்கள், விதிகளை மதித்து வாகனங்கள் இயக்குதல், விதிமீறினால் ஏற்படும் விளைவுகள் குறித்த படங்கள் வைக்கப்பட்டிருந்தன. 
மேலும், பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் சாலை விதிகளை மதித்து நடந்தால் விபத்துகளைத் தவிர்ப்பதோடு, உயிரிழப்புகளையும், உடல் உறுப்பு சேதத்தையும் தவிர்க்கலாம் என வலியுறுத்தப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.