ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரோட்டரி சங்கம், இன்னர்வீல் சங்கம் ஆகியவை சார்பில் உலக தாய்ப்பால் வாரவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ஏ.ராஜ்மோகன் வரவேற்புரையாற்றினார். ரோட்டரி சங்கத்தின் செயலர் எஸ்.முரளி முன்னிலை வகித்தார். இதில் நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் எல்.உஷா பங்கேற்று, கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு செய்து வைத்து ஊட்டச்சத்து உணவு வகைகளை வழங்கி, தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து பேசினார்.
இந்த விழாவில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கே.ராமசாமி, சிட்டி வரதராஜன், கே.குணசேகர், கருணாகர பன்னீர்செல்வம், சுரேந்திரன், இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் ஆர்.மகாலட்சுமி, கே.சரோஜா, எம்.புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் 15-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு செய்து, அவர்களுக்கு முட்டை, சத்து மாவு போன்ற ஊட்டச் சத்துகள் வழங்கப்பட்டன.
இதே போல், சேலம் சாலையில் உள்ள ஆதரவற்ற பள்ளிக் குழந்தைகள் 30 பேருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி! நுழைவு இசைவு நடைமுறைகளை கடுமையாக்கிய அமெரிக்கா

குடியுரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை! உச்சநீதிமன்றம் அதிரடி!
அணைப் பிரச்னைகளுக்கு முதல்வர் விஜய் நிரந்தர தீர்வு காண வேண்டும்! நயினார் நாகேந்திரன்

காலாண்டு வருவாய் அறிவிப்புக்கு முன்னதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3% உயர்வு!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |


