கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் பாடலை எப்போது வேண்டுமானாலும் மாற்றும் புதிய அம்சம்!

இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அம்சம் பற்றி...

News image

இன்ஸ்டாகிராம் செயலி - பிரதிப் படம்

Updated On :27 ஜூலை 2026, 6:08 pm IST

இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் நாம் சேர்க்கும் பாடலை எப்போது வேண்டுமானாலும் மாற்றியமைக்கலாம்.

மெட்டாவு நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியை உலகளவில் சுமார் 300 கோடிகளுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் பாதுகாப்பு, தனியுரிமைக் கொள்கை மற்றும் வசதிக்கேற்றார்போல புதுப்புது அம்சங்கள் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் நாம் பதிவேற்றும் போஸ்ட்டுகளுடன் நமது விருப்பத்துக்கு ஏற்றார்போல, பாடலையும் சேர்த்துக் கொள்ளலாம் என்ற வசதி ஏற்கெனவே உள்ள ஒன்றுதான். ஆனால், அவ்வாறு நாம் சேர்க்கும் பாடலை மீண்டும் நம்மால் மாற்றியமைக்க (எடிட்) முடியாது.

ஒருவேளை, பாடலை மாற்ற வேண்டுமென்றால், அந்த போஸ்ட்டை நீக்கிவிட்டு (டெலீட்) பிறகு புதிய போஸ்ட்டாகத்தான் பதிவேற்ற முடியும். இதனால், அந்த போஸ்ட்டுக்கு வந்த லைக்குகள், கமெண்ட்கள் ஆகியவற்றை இழக்க நேரிடும்.

இந்த நிலையில், ஏற்கெனவே பதிவேற்றப்பட்ட போஸ்ட்டுகளை நீக்காமலேயே நாம் சேர்த்த பாடலை மாற்றியமைக்கும் புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு, இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்குச்சென்று, மேலே உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து, எடிட் என்பதைத் தேர்ந்தெடுத்து, புதிய ஆடியோவை மாற்றி அதனை சேமித்துக் கொள்ள வேண்டும்.

இந்த அம்சம் பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

You can change the song added to an Instagram post at any time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.