சென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

புகைபிடிக்கும் நயன்தாரா... டாக்ஸிக் புதிய பாடல்!

டாக்ஸிக் திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியீடு...

actors yash and nayanthara

நடிகர்கள் யஷ், நயன்தாரா

Published On :

நடிகர் யஷ் நடிப்பில் உருவான டாக்ஸிக் திரைப்படத்தின் புதிய பாடலை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் யஷ் நடித்த டாக்ஸிக் திரைப்படம் எப்போதும் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். டீசர் அளித்த பிரம்மாண்டம் வியப்பில் ஆழ்த்தியதால் எப்படி உருவாகியிருக்கும் என்பதில் பெரிய ஆர்வமும் சமூக வலைதளங்களில் உள்ளது. கீது மோகன்தாஸ் இயக்கிய இப்படத்தில் ருக்மணி வசந்த், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு ஜூன் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் புதிய பாடலான தடுமாறுதே பாடலை வெளியிட்டுள்ளனர். மற்ற மொழிகளிலும் வேறு பெயர்களில் வெளியாகியுள்ளது. தமிழில் விக்னேஷ் சிவன் எழுதிய இப்பாடலை சித்தார்த் பஸ்ரூர் பாடியுள்ளார். இப்பாடலின் விடியோவில் நடிகை நயன்தாரா புகைபிடிப்பது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது.

A new song from the movie Toxic, starring actor Yash, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.