ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு திமுகவும் அதிமுகவும் எந்த காலத்திலும் இணையாது: டிடிவி தினகரன்கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி மேயர் பிரியாவை புறக்கணிக்கவில்லை: ராஜ்மோகன் பதில்!ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

11 இடங்களில் ரூ.37 லட்சம் மதிப்பில் 66 சிசி டிவி கேமரா: அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், போக்குவரத்தைக் கண்காணிக்கும் பொருட்டு மாவட்டத்தில் 11 இடங்களில் ரூ. 37 லட்சம் மதிப்பில்

Updated On :

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், போக்குவரத்தைக் கண்காணிக்கும் பொருட்டு மாவட்டத்தில் 11 இடங்களில் ரூ. 37 லட்சம் மதிப்பில் 66 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி தொடக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போக்குவரத்தைக் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கும் பணி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான நூலகம் திறப்பு விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சிகளுக்கு சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் த. செந்தில்குமார்,  காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு, நாமக்கல் எம்பி  பி.ஆர். சுந்தரம், எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சி. சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிகளில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி பங்கேற்று 11 இடங்களில் ரூ. 37 லட்சம் மதிப்பில் 66 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணியைத் துவக்கி வைத்து, போட்டித் தேர்வர்களுக்கான நூலகத்தைத் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியது: நாமக்கல் மாவட்ட காவல் துறைக்கு சாலை பாதுகாப்புக்காக தமிழக அரசால் ரூ. 58 லட்சம் நிதி வழங்கப்பட்டது. தற்போது ரூ. 37 லட்சம் மதிப்பில் நாமக்கல் மாவட்டத்தில் 11 இடங்களில் 66 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டு குற்றத் தடுப்பு மற்றும் வாகன போக்குவரத்துக் கண்காணிக்கப்படுகின்றது.
மேலும் இந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் காவல் நிலையம் மற்றும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்க்கும் வகையிலும், செல்லிடப்பேசியின் இணைய இணைப்பின் வழியாக பார்க்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. 
 ரூ. 17.40 லட்சம் மதிப்பில் சாலை பாதுகாப்புக்காக பல சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றில் கொல்லிமலை மலைப் பாதையில் 25 பிரதிபலிப்பு குவியாடி கண்ணாடிகள் பதிக்கப்பட்டு விபத்தினைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பள்ளிபாளையம் நகர் சந்திப்பில் தானியங்கி சிக்னல்கள், தோள்பட்டை எல்.ஈ.டி ஒளிப்பான்கள் வாங்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் ரூ. 3.60 லட்சம் மதிப்பில் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பொம்மக்குட்டைமேடு பகுதியிலும் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையிலும், கத்தேரி பிரிவு மற்றும் எஸ்.எஸ்.எம் கல்லூரி அருகிலும் அதிவேக பிரதிபளிப்பான்கள் அமைக்கப்பட்டு விபத்துகளைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.  இதைத் தொடர்ந்து நாமக்கல் நகர காவல் நிலைய வளாகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான நூலகத்தை அமைச்சர் பி. தங்கமணி திறந்து வைத்தார். இந்த நூலகத்தில் தமிழக அரசால் சிறார் மன்றத்துக்காக வழங்கப்பட்ட ரூ. 1 லட்சம் நிதியில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் வாங்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. 
இந்த நூலகம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். போட்டித் தேர்வுக்காகப் படிப்பவர்களும் மற்றும் சிறார்களும் நூலகத்தில் புத்தகங்களைப் படித்து பயன்பெறலாம். மேலும் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 1 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் வாங்கப்பட்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சிகளில் நாமக்கல் சார் ஆட்சியர் சு. கிராந்தி குமார் பதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ். செந்தில், துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், சேலம் ஆவின் தலைவர் ஆர். சின்னுசாமி, அரசு வழக்குரைஞர் தனசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.