ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

கருணை அடிப்படையில் வேலை: சாலைப் பணியாளர்கள் கோரிக்கை

இறந்த சாலைப் பணியாளர்கள் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 8:31 am IST

இறந்த சாலைப் பணியாளர்கள் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் சங்க மாவட்டத் தலைவர் ஜெயக்குமரன் தலைமையில் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட இணைச் செயலர் செல்வக்குமார், துணைத் தலைவர் அன்புச்செழியன் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் சண்முகராஜா, செயலர் ராஜமாணிக்கம், துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் தனபால் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தைப் பணிக் காலமாக அறிவிக்க வேண்டும். இறந்த சாலைப் பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக் குழுவின் நிலுவைத்தொகை முழுவதையும் வழங்கிட வேண்டும். சீறுடை, சலவைப்படி, விபத்துப்படி வழங்கிடவேண்டும்.
நாமக்கல், ஈரோடு மாவட்ட பகுதிகளில் மக்களை காப்பதற்காக வெள்ளத்தடுப்பு உள்ளிட்ட மக்களை பாதுகாக்கும் பணிகளில் சாலைப் பணியாளர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றுவது, கேரள மாநில வெள்ள நிவாரணத்துக்கு சாலைப் பணியாளர்கள் அனைவரும் ஒரு நாள் ஊதியத்தை வழங்குவது, மாவட்ட இணைச் செயலர் ராஜூ நன்றி கூறினார். கூட்டத்தில் சாலைப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.