
திருச்செங்கோடு ஆனங்கூர் பகுதியில், அட்மா திட்டத்தின் கீழ் மானாவாரி வேளாண்மை நுட்பங்கள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
வேளாண்மை உதவி இயக்குநர் அன்புச்செல்வி தலைமை வகித்தார். துணை வேளாண்மை அலுவலர் அப்புசாமி, ஈரோடு தனியார் வேளாண்மை கல்லூரி உழவியல் துறை உதவி பேராசிரியர் கோவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டு, மானாவாரியில் கிடைக்கும் குறைந்த நீரில் விவசாயம் செய்வதற்கு வேண்டிய தொழில்நுட்பங்களான கோடை உழவு, விதை ரக தேர்வு, விதை நேர்த்தி, குழித்தட்டு நாத்து முறை, விதை கடினப்படுத்துதல், நுண்ணீர்ப் பாசனம், பயிர் மூடாக்கு, களை மேலாண்மை, பிரித்து உரமிடுதல், நுனி கிள்ளுதல், பயிர் எண்ணிக்கை பராமரித்தல் ஆகிய தொழில்நுட்பங்களை பற்றியும், அதன் அவசியத்தையும், பயன்களையும் பற்றி விளக்கமளித்தனர்.
உதவி வேளாண்மை அலுவலர் வடிவேலு உழவன் செயலி பதிவிறக்கம் செய்வது பற்றியும், அதன் பயன்பாடுகளையும் கூறினார். திருச்செங்கோடு அட்மா தொழில்நுட்ப மேலாளர் ஹேமலதா அட்மா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து
விளக்கமளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






