
நாமக்கல்லில் செல்லிடப்பேசி பழுது நீக்கம் தொழில்நுட்பம் குறித்த இலவச பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி, நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அரசு பயிற்சி நிறுவனமான இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் செல்லிடப்பேசி பழுது நீக்குதல் தொழில்நுட்பம் குறித்த இலவச சுய வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சிக்காக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண், பெண் தொழில்முனைவோர் 35 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் ஜனவரி 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 30 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படுபம்.
வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோர் மற்றும் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது மற்றும் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சி செலவு, பயிற்சிப் பொருள்கள், உணவு என அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை நேரிலோ அல்லது 04286-221004 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





