
பரமத்தி வேலூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்தார்.
பாண்டமங்கலத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் செளந்தர்ராஜன் (23), தனது வீட்டுக்கு வந்த சகோதரியின் மகன் லோஹித்தை (5), பஞ்சபாளையத்தில் உள்ள சகோதரியின் வீட்டில் விடுவதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்ற போது, முன்னால் சென்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுவன் லோஹித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த செளந்திர்ராஜன் படுகாயமடைந்து நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். விபத்து குறித்து பரமத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




