பெரும்பான்மை மக்களின் கோரிக்கையை ஏற்று தனி அலுவலரை நியமித்து கோயில் திருவிழாவை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த பொதுமக்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் திங்கள்கிழமை
அளித்த மனு:
மல்லசமுத்திரம் சோழீஸ்வரர் கோயில் திருவிழவை ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பங்காளிகள் மட்டுமே நடத்தக் கூடாது. இந்து சமய அறநிலையத் துறை தனி அலுவலரை நியமித்து ஆனி மாத மூல நட்சத்திரத்தில் ஆகம விதிகளின்படி திருவிழவை நடத்த வேண்டும் என பெரும்பான்மை மக்கள் வலியுறுத்தி வருகிறோம்.
இதுதொடர்பாக திருச்செங்கோடு கோட்டாட்சியர் முன்னிலையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில், தனி அலுவலர் நியமனம், உண்டியல், பெயர் பலகை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினோம். ஆனால் எங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.
கோயில் திருவிழாவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பங்காளிகள் 5 பேர் மட்டும் நடத்துவதில், அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பிற சமுதாயத்தினருக்கும் உடன்பாடு இல்லை. இதனால், தனி அலுவலரை நியமித்து திருவிழாவை நடத்த ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









