வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தேர்தல் பணியில் ஈடுபடும் ஒளிப்பதிவாளர்களுக்கு தபால் ஓட்டு வேண்டும்: சங்க பொதுக்குழு தீர்மானம்

திருச்செங்கோடு வட்டார வீடியோ போட்டோ ஒளிப்பதிவாளர்கள் நலச் சங்கப் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள்

Updated On :25 டிசம்பர் 2018, 8:55 am IST

திருச்செங்கோடு வட்டார வீடியோ போட்டோ ஒளிப்பதிவாளர்கள் நலச் சங்கப் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கக் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .
சங்கத்தின் புதிய தலைவராக ஜெயக்குமார், செயலாளராக ராமச்சந்திரன், பொருளாளராக முருகேசன் துணைத் தலைவராக குலோத்துங்கன்,துணைச் செயலாளராக மனோஜ் கண்ணன், மக்கள் தொடர்பு அலுவலராக தேவேந்திரன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். 
புதிய நிர்வாகிகளை வீடியோ போட்டோ ஒளிப்பதிவாளர் நலச்சங்க மாநில தலைவர் மாதேஸ்வரன்,துணைத் தலைவர் சூர்யா, மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணைச் செயலாளர் பொன்னுசாமி ஆகியோர் பதவியேற்பு செய்து வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழுவில்  தமிழகத்தில் உள்ள அனைத்து புகைப்படக் கலைஞர்களையும் ஒன்றிணைத்து தனி நலவாரியம் அமைக்கவும்,அரசுப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவை, உள்ளாட்சி தேர்தல் போன்ற தேர்தல் பணிகளுக்கு சங்கமே டெண்டர் எடுக்க வேண்டும்.
தேர்தல் பணிக்குச் செல்லும் ஒளிப்பதிவாளர்களுக்கு தபால் ஓட்டுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.