பரமத்திவேலூர் மேலத் தெருவில் உள்ள பகவதியம்மன் கோயில் திருத்தேர் மற்றும் பூக்குண்ட திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை அம்மன் திருவீதி உலா வருதல் மற்றும் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
பரமத்திவேலூர் மேலத் தெருவில் உள்ள பகவதி அம்மன் கோயில் திருவிழா கடந்த 21-ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
சனிக்கிழமை இரவு அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், ஞாயிற்றுக்கிழமை மாலை வடிசோறு நிகழ்ச்சியும், இரவு அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
திங்கள்கிழமை இரவு அம்மன் திருவீதி உலா வரும் நிகழச்சியும், பூச்சொரிதல் விழாவும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். செவ்வாய்க்கிழமை மாலை திருத்தேரில் அம்மன் திருவீதி வரும் நிகழ்ச்சியும், புதன்கிழமை பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், வியாழக்கிழமை பொங்கல், மாவிளக்கு நிகழ்ச்சியும், திரு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகின்றன.
வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை பரமத்திவேலூர் மேலத்தெரு பகவதி அம்மன் கோயில் விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









