கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு விற்பனை தொடக்கம்

நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மையத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
Updated on
1 min read

நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மையத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் ரூ.60 லட்சத்துக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு குத்துவிளக்கேற்றி விற்பனையை தொடக்கி வைத்தார். காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், மென்பட்டுப் புடவைகள், கலாசாரப் பட்டு, சரித்திரப் பட்டு, கோராப் பட்டு போன்றவை விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய பருத்தி புடவைகளான கோவை, சேலம், திண்டுக்கல், நெகமம், உறையூர் மற்றும் கூரைநாடு காட்டன், ஆர்கானிக் காட்டன், டர்க்கி டவல், குர்த்தீஸ் உள்பட பல்வேறு வகையான ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இரண்டு வாங்கினால், ஒன்று இலவசம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
சேலம் மண்டலத்தில் ரூ.4.30 கோடி,  நாமக்கல் விற்பனை நிலையத்துக்கு ரூ.60 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், நிர்வாக இயக்குநர்கள் ஆர்.பூபதி, சி.கலைவாணி, எம்.தங்கவேல், சேலம் மண்டல மேலாளர் எஸ்.சண்முகம் கோ-ஆப்டெக்ஸ் நாமக்கல் மைய பொறுப்பாளர் பி.செல்வாம்பாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com