ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

லாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர பா.ம.க. கோரிக்கை

லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தியுள்ளது. 

Updated On :23 ஜூலை 2018, 9:41 am IST

லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தியுள்ளது. 
நாமக்கல் நகர பாமக பொதுக்குழு கூட்டம் தொகுதி அமைப்பு செயலர் சரவணன் தலைமையில் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  மாநில துணைப் பொதுச் செயலர் பொன்.ரமேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினார்.  மாவட்ட இளைஞர் சங்கச் செயலர் சூரியபிரகாசம் மற்றும் நிர்வாகிகள்
பங்கேற்றனர். 
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:    நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அனைத்து வாகனங்களுக்கும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்க வேண்டும்.  பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் 3 நாள்களாக நடைபெற்று வருவதால், அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்ந்துகொண்டே வருகிறது.  இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 
எனவே மத்திய,  மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களை அழைத்துப்பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி லாரி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க
வேண்டும். 
நாமக்கல் நகராட்சியில் குடிநீர்க் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.  பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.  ஸ்ரீநாமகிரி தாயார் மற்றும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த நகராட்சி நிர்வாகம் இடவசதி செய்துதர வேண்டும்.  நாமக்கல் பகுதியில் போதைப் பொருள்களின் விற்பனையைக் கட்டுப்படுத்த போலீஸார் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.