ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கக் கூட்டம்
ஓய்வு பெற்ற அலுவலர் சங்கக் கூட்டம் சங்க துணைத் தலைவர் நா.கு.பெரியசாமி தலைமையில் நாமக்கல்லில் அண்மையில் நடந்தது.


ஓய்வு பெற்ற அலுவலர் சங்கக் கூட்டம் சங்க துணைத் தலைவர் நா.கு.பெரியசாமி தலைமையில் நாமக்கல்லில் அண்மையில் நடந்தது.
அதில் மார்ச் 6 இல் சென்னையில், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக, சங்கத்தின் நிறைவேறாக் கோரிக்கைகளை வெல்வதற்கு போராட்டங்கள் நடத்த வேண்டும் என முடிவு மேற்கொண்டால், அதற்கு நமது சங்கத்தின் சார்பில் முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, குடும்ப வாழ்வில் மூத்தோர்கள் சொத்தாக கருத்தப்படுகிறார்களா? அல்லது சுமையாக கருதப்படுகிறார்களா? என்ற தலைப்பில் சிந்தனை சொற்பொழிவு நடந்தது. ஆசிரியர் கே.சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், எல்.சதாசிவம்,கே.ராமசாமி, பி.சுப்ரமணியன்,வி.கருப்பண்ணன், கார்த்திக்ராஜா, பொன்.சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட அமைப்பு செயலர் பி.சுப்ரமணியன், துணைத் தலைவர் பொன். சுப்ரமணியன், பொருளாளர் வை.வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...