ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: பாவேந்தர் இலக்கிய பேரவை கண்டனம்
சென்னை ஐஐடி அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பதாக பாவேந்தர் இலக்கியப் பேரவை தெரிவித்துள்ளது.


சென்னை ஐஐடி அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பதாக பாவேந்தர் இலக்கியப் பேரவை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் மருதகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற துறைமுகத் தொழில்நுட்ப ஆலோசனை மையம் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இணையமைச்சர் பொன்.ராதாகிஷ்ணன் மற்றும் மத்திய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் அரசு விழாக்களில் வழக்கமாக இசைக்கப்படும் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு, மாறாக சம்ஸ்கிருத பாடல் பாடியுள்ளனர். விழா இறுதியில் தேசியகீதம் இசைக்கப்பட்டது.
பிரதமர் மோடி சம்ஸ்கிருதத்தை விட தமிழ்மொழி பழமையானது இனிமையானது என்று கருத்துத் தெரிவித்துள்ளார். பிரதமரின் கருத்தை மத்திய அரசும், அதன் நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும். தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி.யில் தமிழுக்கு விரோதமான நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...