ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

"நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு முக்கியமானது'

நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது என முனைவர் விமலா அண்ணாதுரை தெரிவித்தார். 

Updated On :29 மார்ச் 2018, 2:40 am

நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது என முனைவர் விமலா அண்ணாதுரை தெரிவித்தார். 
நாமக்கல் டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 18-ஆவது  ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி தலைவர் பி.கே.செங்கோடன் தலைமை வகித்தார். செயலர் கே.நல்லுசாமி முன்னிலை வகித்தார். முதல்வர் எம்.ஆர்.லட்சுமிநாராயணன் ஆண்டறிக்கை வாசித்தார்.
 டிரினிடி அகாதெமி மெட்ரிக் பள்ளித் தலைவர் ஆர்.குழந்தைவேல், செயலர் டி.சந்திரசேகரன், டிரினிடி பப்ளிக் பள்ளித் தலைவர் பி.பழனிசாமி, செயலர் ராம.சீனிவாசன், இயக்குநர்கள் பி.தயாளன், எஸ்.கோபால், ஜெ.அருண்குமார் ஆகியோர் பேசினர். 
 சிறப்பு அழைப்பாளராக தன்னம்பிக்கை பேச்சாளரும், சென்னை கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவருமான முனைவர் விமலா அண்ணாதுரை பங்கேற்றார். அவர் பேசியது: பெண்கள் உயர்கல்வி கற்பதன் மூலம் வீட்டு நிர்வாகத்தை மிகவும் சிறப்பாக நடத்த முடியும். நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது.  தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் கல்வி அளிப்பதில் சிறப்பிடம் பெற்றுள்ளது. நன்கு திட்டமிட்டு படித்தால் தேர்வில் அதிக விழுக்காடுடன் தேர்ச்சி பெற்று, போட்டித் தேர்வுகள் எழுதி அரசுப் பணி மற்றும் புகழ்பெற்ற தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை எளிதாக பெற முடியும் என்றார். 
 பல்கலைக்கழகத் தேர்வு, விளையாட்டு உள்ளிட்டவற்றில் சிறப்பிடம் பெற்ற மாணவியர், பல்கலைக்கழகத் தேர்வுகளில் அதிக தேர்ச்சி விழுக்காட்டை அளித்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றம் பரிசுகள் வழங்கப்பட்டன.  கல்வியில் சிறந்து விளங்கும் மாணவியருக்கு அறக்கட்டளைகள் மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், பிரமிடு மற்றும் யோகா நிகழ்வுகள் நடைபெற்றன.
கல்லூரி முன்னாள் முதல்வர் கே.முத்துராஜ், நிர்வாக அலுவலர். என்.எஸ்.செந்தில்குமார், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி பேராசிரியர் அரசு பரமேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.