தமிழகம் முழுவதும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட ரயில்வே பள்ளிகளை மீண்டும் திறக்கும்படி, குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமை சட்ட ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு அகில இந்திய ரயில் பாதுகாப்புக் குழு உறுப்பினரான என்.கே.பி.ரவிக்குமார் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தமிழகம் மற்றும் கேரளத்தில் 9 ரயில்வே பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த ரயில்வே பள்ளிகளை இந்த கல்வி ஆண்டுடன் மூட உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இயங்கும் ரயில்வே பள்ளிகளை மூடும் முடிவைக் கைவிட வேண்டும் என அகில இந்திய ரயில் பாதுகாப்புக் குழு உறுப்பினர் என்.கே.பி.ரவிக்குமார் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட ரயில்வே பள்ளிகளை மீண்டும் திறக்கும்படி, குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமை சட்ட ஆணையம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு நன்றி தெரிவித்துள்ள ரவிக்குமார், ரயில்வே பள்ளிகளை தொடர்ந்து நல்ல முறையில் நடத்திட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 27 - நேரலை

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபி

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெற வேண்டும்: முன்னாள் வீரர்

குறைவான மின்செலவு... பட்ஜெட் விலையில் ஹையர் மைக்ரோவேவ் ஓவன்!
விடியோக்கள்

தனுஷ்க்கும் அரசியல் ஆசை| Valaipechu Anthanan Interview | Dhanush | National Film Award | TVK| CM Vijay


