சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து மறியல்: மாவட்டத்தில் திமுகவினர் 161 பேர் கைது

சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் திமுக சார்பில் 7

Updated On :25 மே 2018, 2:39 am IST

சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் திமுக சார்பில் 7 இடங்களில் சாலை மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 161 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தமிழக முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு அவரது அறை முன்பு அமர்ந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திடீரென தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் 20-க்கும் மேற்பட்ட திமுக எம்எல்ஏக்களும் அமர்ந்து கோரிக்கை முழக்கம் எழுப்பினர்.
இதையடுத்து, தர்னாவில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீஸார் தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேற்றினர். ஆனால் வெளியே வந்த ஸ்டாலின் அங்கும் சாலை மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மணிக்கூண்டு அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலை மறியல் போராட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் பார் இளங்கோவன் தலைமை வகித்தார். நகர பொறுப்பாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். இதில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் சம்பத்குமார், சரஸ்வதி உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்ளிட்ட 45 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மாவட்டத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், கொல்லிமலை வாழவந்திநாடு, வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, ராசிபுரத்தில் 2 இடங்கள் என மொத்தம் 7 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற 161 பேரை போலீஸார் கைது செய்தனர். திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட 10 இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமத்தி வேலூரில்...
பரமத்தி வேலூர் மற்றும் பொத்தனூரில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து தி.மு.கவினர் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் முன் தி.மு.க நகர செயலாளர் மாரப்பன் தலைமையில் தி.மு.கவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல் பொத்தனூர் நான்கு சாலையில் பொத்தனூர் நகரச் செயலாளர் கருணாநிதி தலைமையில் ஏராளமான தி.மு.கவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினை கைது செய்த தமிழக அரசைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.