பரமத்தி வேலூர் அருகே இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி ஏமாற்றியதாக பரமத்தி வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இளைஞரின் தந்தையை கைது செய்து தலைமறைவான தாய் மற்றும் இளைஞரை தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளம்பெண் ஒருவர் பரமத்தி வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது: நான் கரூரில் உள்ள ஆலையில் பணிபுரிந்து வருகிறேன். பரமத்தி வேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையத்தில் உள்ள பெரியம்மா வீட்டுக்கு வந்து செல்லும் போது, பொத்தனூரைச் சேர்ந்த நல்லுசாமி மகன் சரண் (எ) சரண்ராஜூக்கும் (28) எனக்கும் கடந்த 6 மாதங்களாக பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிச் சென்றதாகவும், இது குறித்து அவரது வீட்டுக்குச் சென்று கேட்டபோது, சரண்ராஜின் பெற்றோர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பரமத்தி வேலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சரண்ராஜின் தந்தை நல்லுசாமியைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான சரண்ராஜ் மற்றும் அவரது தாய் தங்கம்மாளைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காா் - ஆட்டோ மோதல்: உயிரிழந்தோா் எண்ணிக்கை 2-ஆக உயா்வு

குருமாவில் பல்லி: உணவகத்துக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்

முண்டியம்பாக்கத்தில் சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்குப் பிந்தைய சேவைகளுக்கு 1.6 லட்சம் போ் விண்ணப்பம்: சிபிஎஸ்இ
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


