உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

மக்களவைத் தேர்தல் தி.மு.க.வுக்கு மானப் பிரச்னை: பொங்கலூர் நா.பழனிசாமி

வரும் மக்களவைத் தேர்தலில் கட்சியின் மானம் காப்பற்றப்பட வேண்டும்.

Updated On :5 நவம்பர் 2018, 8:55 am IST

வரும் மக்களவைத் தேர்தலில் கட்சியின் மானம் காப்பற்றப்பட வேண்டும். அதற்காக சில இடங்களில் நமக்கு மரியாதைக் குறைவு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற மனநிலை தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஏற்பட வேண்டும் என்றார் முன்னாள் அமைச்சரும்,  நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான பொங்கலூர் நா.பழனிசாமி.
நாமக்கல் மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் ரா.உடையவர் தலைமையில் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  மாவட்டப் பொறுப்பாளர் செ.காந்திசெல்வன் வரவேற்றார்.  மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் பார்.இளங்கோவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். 
நாமக்கல் மக்களவைத் தொகுதி தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி பேசியது:  2016 சட்டப்பேரவை தேர்தலில் 1.5 சதவீதம் வாக்குகள் அதாவது 18 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுத்தான் அ.தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது.  கொங்கு மண்டலத்தில் உள்ள 52 தொகுதிகளில் 7 தொகுதிகளில் மட்டுமே தி.மு.க. வெற்றிபெற்றது.  அ.தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதிகளில் 25 தொகுதிகள் 5,000 வாக்குகளுக்குக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசம்தான் இருந்தது. 
ஜெயலலிதா தேர்தலை எதிர்கொண்டது போல், இப்போதுள்ள அ.தி.மு.க. தலைமைக்கு தேர்தலை எதிர்கொள்ளும் பலம் இல்லை.  
ஊழல் குற்றச்சாட்டுகள்,  மக்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்தாதது போன்றவற்றால் தமிழக ஆட்சியாளர்கள் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.  மத்தியில் ஆளும் பா.ஜ.க.  ஜி.எஸ்.டி.,  பண மதிப்பிழப்பு போன்றவற்றால் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது. 
இதனால் வரும் மக்களவைத் தேர்தலை தி.மு.க.வினர் மிகவும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்.  இதற்காக தி.மு.க.வினர் கட்டுக்கோப்பாகப் பணியாற்ற வேண்டும்.  வேலை செய்யாத கட்சி நிர்வாகிகள் யாராக இருந்தாலும், தலைமையின் உத்தரவின்படி கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவர். 
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளது.  இதனால் இந்த மாதம் இறுதி முதலே மக்களவைத் தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நானும், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.பார்த்திபனும் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் தங்கியிருந்து கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற உள்ளோம். 
கள்ள வாக்குப் போடுவதைத் தடுக்க,  பூத் கமிட்டி உறுப்பினர்கள்  அத்தகைய நபர்களை இப்போதே அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.   அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்ற முன்வர வேண்டும்.  இல்லையென்றால்,  தலைமை உத்தரவுடன் கட்சி நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை
எடுக்கப்படும். 
வரும் மக்களவைத் தேர்தலில் கட்சியின் மானம் காப்பாற்றப்பட  வேண்டும்.  அதற்காக சில இடங்களில் நமக்கு மரியாதை குறைவு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற மனநிலை கட்சி நிர்வாகிகளுக்கு ஏற்பட வேண்டும் என்றார்.  
இதில் மக்களவைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் பேசியது:  பூத் கமிட்டியினர் தினமும் 2 மணி நேரம் கட்டாயம் தேர்தல் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தி.மு.க.வுக்கு 600 வாக்குகள் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.