நாமக்கல் மாவட்ட உலகத் தமிழ்க் கழகத்தின் சார்பில் கழகத்தின் பொன்விழா நிகழ்ச்சிகள் நாமக்கல் கந்தசாமி கண்டர் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் தனபால் தலைமை வகித்தார். வடக்கு மண்டலப் பொறுப்பாளர் சக்கரபாணி, ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மு.ஆ. உதயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உலகத் தமிழ்க் கழக நாமக்கல் கிளை தலைவர் சண்முகம் வரவேற்றார். இணைத் தலைவர் தமிழ்வாணன், துணைத் தலைவர் செல்சின் நாகவரசன், துணைப் பொதுச்செயலர் அன்பிற்கரசு, பொருளாளர் செந்தமிழ்வேந்தன், இணைப் பொதுச்செயலர் இளந்திரையன் ஆகியோர் தமிழறிஞர்களின் உருவப் படங்களைத் திறந்து வைத்தனர்.
உலக தமிழ்க் கழகத் தலைவர் முத்தையன் விழாவைத் தொடக்கி வைத்துப் பேசினார். நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவைச் செயலர் செல்வ. செந்தில்குமார், மாநிலத் துணைச் செயலர் தமிழ்ச்செல்வன், நெறியாளர் நெடுஞ்சேரலாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர். விழாவில் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







