ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி சிறப்பு முகாம்: சார்-ஆட்சியர் ஆய்வு

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை நாமக்கல் சார் ஆட்சியர் சு.கிராந்தி குமார் பதி ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Updated On :8 அக்டோபர் 2018, 9:18 am IST

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை நாமக்கல் சார் ஆட்சியர் சு.கிராந்தி குமார் பதி ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணியை முன்னிட்டு சிறப்பு முகாம்கள் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதனையொட்டி  நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 661 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. 
இந்த முகாமில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி நிலைஅலுவலர்கள் மற்றும் வாக்குச் சாவடி மைய அலுவலர்கள் உரிய வாக்காளர் பட்டியல் விவரங்கள் மற்றும் போதுமான படிவங்களுடன் மையங்களில் இருந்து விண்ணப்பங்களை பெற உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 
நாமக்கல் வட்டம், கொண்டிசெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் வகுரம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமை நாமக்கல் சார் ஆட்சியர் சு.கிராந்தி குமார் பதி  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முகாமில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருந்ததையும், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றத்துக்கான படிவங்கள் தேவையான அளவு உள்ளதா? என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் திருத்தப்பணிகள் மேற்கொள்வதற்காக வாக்குச்சாவடி மையத்திற்கு வந்திருந்த விண்ணப்பதாரர்களின் படிவங்களை பார்வையிட்டும் ஆய்வு செய்தார். 
 இந்த முகாமினை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் வரும் 14 ஆம் தேதி அன்றும் நடைபெறும். எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நாமக்கல் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என சார் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த ஆய்வின்போது நாமக்கல் வட்டாட்சியர் சி.செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.