வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

நாமக்கல்லில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்லில் தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

Published On :

நாமக்கல்லில் தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தனியார் துறை நிறுவனங்களும் மற்றும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர், விற்பனை பிரதிநிதி, கண்காணிப்பாளர், மேலாளர், கணினி இயக்குபவர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக்,  விற்பனை உதவி கண்காணிப்பாளர், இரவுக் காவலர் மற்றும் ஆசிரியர் போன்ற பணிகளுக்கு டிப்ளமோ, பட்டப் படிப்பு மற்றும் பள்ளிப் படிப்பு பி.எட்., முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித் தகுதிக்கும் தகுதியானவர்களை தனியார்துறை நிறுவனங்கள் தேர்வு செய்கின்றன.
இந்தப் பணிகளுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இதுதவிர இதர கல்வித்தகுதிகள் உடையோரும் தகுந்த பணியிடங்களுக்குப் பரிசீலிக்கப்படுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.