மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்தநாளையொட்டி, நாமக்கல் குளக்கரையில் எம்.ஜி.ஆர். பூங்கா ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
நாமக்கல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் தொகுதி மேம்பாட்டு நிதியில், நாமக்கல் குளக்கரை திடலில் ரூ.20 லட்சம் மதிப்பில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய, எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்ட பூங்கா அமைக்கப்பட்டது. மேலும், நாமக்கல் - துறையூர் சாலையில் இருந்து ரயில் நிலையத்துக்கு ரூ.2.70 கோடி மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இவற்றின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் வரவேற்றார். தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, பூங்காவையும், ரயில் நிலைய சாலையையும் திறந்து வைத்தார். சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா, நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.சந்திரசேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். விழாவையொட்டி, கிராமிய இசை கலைஞர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதியரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம் முதல்வருடன் பதவியேற்கும் 20 அமைச்சர்கள்!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து

இன்றைய ராசி பலன்கள் (மே 18 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு எப்படி?
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
