தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

நாமக்கல் டிரினிடி கல்லூரியுடன் பெங்களூரு சோனா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெங்களூரு சோனா யுக்தி நிறுவனம் இணைந்து

Updated On :25 பிப்ரவரி 2019, 8:26 am IST

நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெங்களூரு சோனா யுக்தி நிறுவனம் இணைந்து அண்மையில் கல்லூரி அரங்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் பி.எஸ்.கே. செங்கோடன் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் கே. நல்லுசாமி மற்றும் கல்லூரி முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் உஷாராணி வரவேற்றார்.  கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநர் கே.மனோகரன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். சிறப்பு அழைப்பாளராக பெங்களூரு - சோனா யுக்தி நிறுவனத்தின் வளாகத் தேர்வு மற்றும் பயிற்சித் துறை முதுநிலை மேலாளர் ஹெச்.சங்கர் கலந்து கொண்டு பேசுகையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இக்கல்லூரியில் பயிலும் மாணவியர்கள் பயனடையும் வகையில் கருத்தரங்கு,  பயிற்சி முகாம், ஆளுமை முன்னேற்றப் பயிற்சி, தகவல் தொடர்பியல் பயிற்சி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி, தொழில் முனைவோர் ஊக்குவிப்பு பயிற்சி, வேலை வாய்ப்பு வளாகத் தேர்வுகள் போதிய இடைவெளியில் கல்லூரி வளாகத்திலேயே நடைபெறும் என்றார்.
 டிரினிடி அகாதெமி தலைவர் ஆர்.குழந்தைவேல் மற்றும் அதன் செயலர் டி.சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வில் சோனா யுக்தி நிறுவனத்தின் மேலாளர்கள் அத்திராஜ் தயாளன், ஏ. ஆசிப் அலி, கல்லூரி நிர்வாக அலுவலர் என்.எஸ்.செந்தில்குமார், கல்லூரி வேலைவாய்ப்பு பயிற்சி பொறுப்பாளர்கள் பி.சுதா,  டி.கவிதா, எம்.சித்ரா, எஸ்.மைதிலி உள்பட துறைத் தலைவர்கள், பேராசிரியைகள் மற்றும் 1500-க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் வணிகவியல் துறைப் பேராசிரியை ஜி.சத்யசங்கரி நன்றி கூறினார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.